கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,
பதிவாளர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளரை நேர்மையாகவும் சட்டபூர்வமாகவும் நியமித்தல், ஆராய்ச்சி மாணவர்களை அடிமை போல் நடத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போன்ற
பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.