சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் 2011ஆம் ஆண்டு இதே அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு அவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.