சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் வைத்து சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (டிச. 26) காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வாயிலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.