தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என 'வாழை' பட நடிகர் பொன்வேல் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தவெக கட்சியில் சேரவில்லை. நிர்வாகிகளுடன் புகைப்படம் மட்டுமே எடுத்தேன். எனக்கு இன்னும் அவ்வளவு வயது ஆகவில்லை. 18 வயது ஆன பிறகு கட்சியில் இணைவேன் என்றார். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.