கோவை ஆலாந்துறை, போளுவாம்பட்டியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனிராஜின் XL சூப்பர் இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகாததால், அதை பழுதுபார்க்க ஸ்ரீ ஹரி வொர்க் ஷாப்பில் சரி செய்ய விட்டிருக்கிறார்.
வாகனத்தை பழுதுபார்த்து ஸ்டார்ட் செய்தபோது, டேங்க் கவரில் பதுங்கியிருந்த குட்டி கொம்பேறி மூக்கன் பாம்பு திடீரென தலை நீட்டி எட்டிப்பார்த்தது. இதைக் கண்ட வொர்க் ஷாப் ஊழியர்கள் மற்றும் அருகிலிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஒன்று சேர்ந்து பாம்பை லாவகமாகப் பிடித்து, அருகிலுள்ள வனப்பகுதியில் விடுவித்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.