கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மாரிமுத்து (36), மரிய சந்தியா (30). இந்நிலையில், நேற்று (டிச.19) ஏற்பட்ட குடும்ப தகராறில் மாரிமுத்து மரிய சந்தியாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், தலை தனியாகவும் உடலை இரண்டாகவும் வெட்டி பைகளில் அடைத்து வெளியே கொண்டு வந்திருக்கிறார். ரத்த வாடைக்கு நாய் குறைத்ததையடுத்து பக்கத்து வீட்டினர் மாரிமுத்துவை போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.