ATM - களில் நூதன முறையில் பணம் திருட்டு!

60பார்த்தது
கோவை குனியமுத்தூர் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குனியமுத்தூர் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் உண்மையில் பணம் வரவில்லை. 24 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள், அவ்வாறு நடக்காததால் வங்கி கிளையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியேறும் பகுதியில் 'டேப்' ஒட்டி விட்டு வெளியேறியது தெரிய வந்தது. பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்று தோல்வியுற்று வெளியேறிய பிறகு, அதே நபர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து ரூ. 30, 000 திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. இதையடுத்து வங்கி கிளை மேலாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேக நபர்கள் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில், இதே முறையில் கோவை பெரியகடை வீதி ஏடிஎம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஏடிஎம் உள்ளிட்ட மொத்தம் 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி