நெல்லையில் விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞர் நீதிமன்ற வாசலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நின்றுக் கொண்டிருந்த மாயாண்டி என்பவரை காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பியோடியது. முன்விரோதம் காரணமாக இப்படுகொலை அரங்கேறியுள்ளது என போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.