ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? என எம்பி சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "கடந்த மாதம்தான் பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வு தேதியை போராடி மாற்றினோம். "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் தமிழர் திருநாளான ஜன.15, 16 தேதிகளில் வருகிறது. ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.