அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கைது செய்ய வேண்டும் எனக்கோரி விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமையில் அக்கட்சியினர் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் அமர்ந்து இன்று (டிச.20) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார ரயில் செல்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.