பந்தலுார்: வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்!
நீலகிரி மாவட்டத்தில், வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த அரசாணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். வருவாய் துறை அலுவலர்களின் பணி நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், துறை ஊழியர்கள் அலுவலக வளாகங்களில் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.