மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி ஏலத்தில் பங்கேற்று, வீரர்களை தேர்ந்தெடுத்தார். அப்போது அவர் கையில் வைரங்களால் ஆன ஆடம்பர வாட்ச் ஒன்றை கட்டியிருந்தார். இதன் விலை ரூ.1 கோடியே 5 லட்சத்து 7 ஆயிரம். ரோலக்ஸ் கம்பெனியின் இந்த வாட்ச் டே-டேட் என்று அழைக்கப்படுகிறது. 18 காரட் விலையுயர்ந்த வெள்ளை தங்கம், வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் கூட 7 மணி நேரம் இயங்கும். இந்த கடிகாரத்தை செய்ய ஒரு ஆண்டு ஆகியுள்ளதாம்.