பந்தலுார்: சாலையில் சாதாரணமாக உலாவரும் யானை

73பார்த்தது
பந்தலுார்: சாலையில் சாதாரணமாக உலாவரும் யானை
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே முக்கட்டி பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று முகாமிட்டு சாலைகளில், பகல் நேரங்களிலேயே தென்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்த ஒற்றை யானை, குந்தலாடியிலிருந்து முக்கட்டி செல்லும் சாலையோர தேயிலை தோட்டம் வழியாக சாலையை கடக்க வந்துள்ளது.

அதனை பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள் கூச்சல் போட்டு சாலையில் வாகனங்கள் வரவிடாமல் தடுத்தனர். ஆனால் யானை வருவது பற்றி அறியாத ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை பார்த்த அந்த யானை, அவரை நோக்கி வேகமாக ஓடியது.

இதைப்பார்த்து பயந்த இருசக்கர வாகன ஓட்டி, இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு இறங்கி ஓட தொடங்கினார். வாகனத்தின் அருகே சென்ற யானை சிறிது நேரத்தில் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது, இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி