டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் கடந்த 2006ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இதன்கீழ் பெண் கருவுற்ற 4ஆவது மாதத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். அடுத்து, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் 6 ஆயிரம் வழங்கப்படும். குழந்தை பிறந்த பின்னர் 9ஆவது மாதத்தில் ரூ.2 ஆயிரம் என 3 தவணைகளாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பெற கருவுற்ற பெண்கள் 12 வாரத்திற்குள் அரசு சுகாதார மைய செவிலியரிடம் ஆதார் கார்டை கொடுத்து பதிவுசெய்யவேண்டும்.