
நாமக்கல்: எஸ்.ஐ வேலைக்கு ஆட்கள் தேர்வு
தமிழக காவல்துறையில், காவல் சார் ஆய்வாளர்கள் 654, பெண்கள் 279, காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை) ஆண்கள் 255, பெண்கள் 111 என மொத்தம் 1,352 எஸ்.ஐ பணியிடங்களுக்கு அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து வரும் 7ம் தேதி முதல் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.