செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தனியார் பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆண்டு விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சினிமா வேறு அரசியல் வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவில் வேண்டுமானால் விஜய் முதல்வராகவோ பிரதமராகவோ ஆகலாம் நிஜத்தில் ஆக முடியாது” என்றார். முன்னதாக, “விஜய்க்கு எதிராக அரசியலில் போட்டிப்போட தயார்” என தெரிவித்திருந்தார்.