பள்ளிப்பாளையம் - திருச்செங்கோடு சாலை முனியப்பன் நகரை சேர்ந்தவர் தேவராஜ், 45; இவரது மனைவி கவிதா. இவர், நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். சிலிண்டரில் வாயு தீர்ந்துவிட்டது. இதனால் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து மாற்றினார். அப்போது வாயு கசிந்து திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் பரவியது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து தப்பினர். இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்