பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. மொகாலியில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, ரியான் பராக் 43*, சாம்சன் 38 ரன்கள் குவித்தனர்.