காசாவில் உதவிக்குழு ஊழியர்கள் 15 பேரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராஃபா நகரத்தில் ஆம்புலன்ஸ்களில் சென்றுகொண்டிருந்த உதவிக்குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.