பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 206 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த பஞ்சாப், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 62, மேக்ஸ்வெல் 30 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 3, சந்தீப் மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.