குட்கா விற்பனை... 2 கடைகளுக்கு சீல்
பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் பள்ளிப்பாளையம், ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று(செப்.19) ஆய்வு செய்தனர். ஆய்வில், ஓடப்பள்ளி பகுதியில் இரண்டு கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் ஒன்றரை கிலோ கைப்பற்றப்பட்டு, தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.