Poco F7 Ultra மற்றும் Poco F7 Pro மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் Poco நிறுவனம் அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் லைன்-அப்-ஐ விரிவுப்படுத்தியுள்ளது. Poco F7 Ultra மொபைலின் விலையானது அடிப்படை 12GB+256GB வெர்ஷனுக்கு ரூ.51,000 முதல் தொடங்குகிறது. மேலும், 16GB வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும்.