சென்னையில் இன்று நடந்த ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், போட்டியைக் காண வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை அணி சரியா விளையாடவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது. தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றனர். இனிவரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவார்கள்” என்றார்.