கம்யூட்டரில் வாட்ஸ்அப்: மறக்காமல் இதை செஞ்சிடுங்க
அலுவலக பணிகள் மற்றும் பிற காரணங்களுக்காக பலரும் பொது இடங்கள், பிரவுசிங் சென்டர்கள் அல்லது வேறு இடங்களில் கம்ப்யூட்டர்களில் வாட்ஸ் அப்பை Login செய்கின்றனர். ஆனால் Logout செய்யாமல் மறந்து விட்டு செல்கின்றனர். இப்படி செய்வதால் பிறர் நம்முடைய தகவல்களை திருடுவதற்கும், நம்முடைய தனிப்பட்ட உரையாடல்களைப் படித்துவிட்டு பிளாக்மெயில் செய்யவும் வாய்ப்பு உண்டு. எனவே எங்கு வாட்ஸ்அப் Login செய்தாலும் அதை Logout செய்ய மறக்காதீர்கள்.