புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணித்த வட மாநில இளைஞர் ஒருவர் கழிப்பறையில் இருந்து வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. இதையடுத்து, ஈரோடு ரயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அந்த நபர் இறந்து கிடந்துள்ளார். அதன்பின், உடலை மீட்ட போலீஸார், அந்த இளைஞரை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.