'உலகநாயகன்' என்று என்னை அழைக்க வேண்டாம் கமல்ஹாசன் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் என கமல் தெரிவித்துள்ளார். 'தெனாலி' படத்தில் இருந்து தான் கமலை 'உலக நாயகன்' என்று அழைக்கும் வழக்கம் உருவானது. இதற்கு முன்னதாக நடிகர் அஜித்குமாரும் தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் அஜித்குமார் அல்லது அஜித், AK என கூப்பிடுங்கள் என்று தெரிவித்திருந்தார். அஜித்தை தொடர்ந்து தற்போது கமலும் அதனை பின்தொடர்ந்துள்ளார்.