மதுரை அவனியாபுரத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் 70 வது பிறந்த விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மரம் நடும் விழா, கொடியேற்று விழா, உணவு வழங்கும் விழா நேற்று (நவ. 10) கொண்டாடப்பட்டது.
அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் மரக்கன்றுகள் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நடப்பட்டது அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் மந்தை திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் கமல் முனியாண்டி முன்னிலை வகித்தார். அவனி நகர செயலாளர் ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
மதுரை மண்டலத் தலைவர் வழக்கறிஞர் கரிமேடு அழகர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மாநில மகளிர் அணி தலைவி பத்மாவதி உணவு வழங்கினார் விழாவில் ஆசைத்தம்பி, பரணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.