முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது டெலாவர் வீட்டுக்கு அருகே மணற்பாங்கான கடற்கரையில் நடந்து செல்லும்போது, அவர் தடுமாறுவதும், அவருக்கு ஜில் பைடன் உதவும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. 81 வயதை எட்டியுள்ள பைடன், ஒரு குழந்தையை போல சரியாக நடக்க முடியாமல் மெல்ல, மெல்ல தடுமாறியபடியே நடந்து செல்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.