மதுரை திருமங்கலத்தில் உள்ள பலகார கடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் திமுக வார்டு கவுன்சிலர் காசி பாண்டி சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் போது கவுன்சிலர் காசி பாண்டி கடையை சூறையாடியுள்ளார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.