சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுத் திட்டங்கள் குறித்து விவாதிக்க தன்னை அழைத்தால் நிச்சயமாக செல்வேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினின் அரசை கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். சமீபத்தில் பழனிசாமி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் நேருக்கு நேர் விவாதிக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என கேள்வியெழுப்பியிருந்தார்.