மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் தேங்கியது. இந்த நிலையில் தேவர் ஜெயந்திக்காக மதுரைக்கு வந்த ஆய்வுக் கூட்டத்தில் செல்லூர் கண்மாய் பற்றி விளக்கியதால்
முதல் கட்டமாக 11. 90 லட்சங்களுக்கு ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் குடிநீர் பைப் மற்றும் கழிவுநீர் பைப்புகளை இடம் மாற்றம் செய்வதற்கு 315. 95 லட்சங்களுக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதால் 11. 90 லட்சங்களுக்கு பதிலாக 1510. லட்சங்களுக்கு மறு மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி செல்லூர் கண்மாயில் புதிய ரெகுலேட்டர் தொட்டி மற்றும் 290 மீட்டர் நீளத்திற்கு சுரங்க கால்வாய் கட்டும் பணி ஆகியவைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் இன்று அதற்கான பணிகளை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியாளர் மாநகராட்சி ஆணையாளர் மேயர் துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முடங்க சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பணிகளை தொடங்கி வைத்தார்.