தமிழகத்தில் நாய்க்கடியால் 4 லட்சம் பேர் பாதிப்பு
தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் 1.70 லட்சம் நாய்களும், தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்களும் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 1 முதல் இன்று வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர். அதில் 36 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதேபோல் பாம்பு கடியால் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.