தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. கஸ்தூரியின் வீட்டிற்கு காவல் துறையினர் விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும் அவரது செல்போன் Switch off-ல் உள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.