மதுரை செல்லூர் அருகே உள்ள முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி என வழக்கு நடந்து வந்தது. அப்போது நீதிபதி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இன்று அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக தங்களது இல்லங்களை காலி செய்துவிட்டு மாற்று இடங்களுக்கு செல்லுங்கள், நாங்கள் இந்த இடத்தை இடிக்க போகிறோம் என்று கூறிச் சென்றனர்.
உடனடியாக அதிர்ந்து போன பொது மக்கள் அனைவரும் இன்று மதுரை வருகை தந்த முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவும் முயற்சித்தனர், இருப்பினும் கூட போலீசாரை பொறுத்தவரையில் நாளை அல்லது நாளை மறுநாள் முழுவதும் இடிக்கப்படும் நீதிமன்ற உத்தரவு எங்களிடம் இருக்கிறது.
பொதுமக்கள் உடனடியாக காலி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் என்பது இல்லை, மாநகராட்சி வரி மற்றும் வீட்டு வரி, மின்சார கட்டணம் போன்றவைகளை பல ஆண்டுகளாக நாங்கள் செலுத்தி வருகிறோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நபர்கள் தற்சமயம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எங்களது வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே செல்வது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.