55வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “அமரன் போன்ற தேசப்பற்று உள்ள படங்களை நாம் வரவேற்க வேண்டும். நாட்டுப்பற்றை போற்றும் திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்றார். மேலும், ஓடிடி தளத்திற்கு தணிக்கை கொண்டு வர வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.