தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் (81) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (நவ.9) காலமானார். அவரது உடலுக்கு, இரவு முதலே உறவினர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், “மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்” என்றார். தற்போது, முதலமைச்சர் விருதுநகர் மாவட்ட கள ஆய்வில் உள்ளார்.