தூக்கத்தில் நெஞ்சில் யாரோ அமுக்குவது போல் உள்ளதா?
பலருக்கும் தூங்கும் பொழுது நெஞ்சில் யாரோ அமுக்கவது போலவும், அந்த சமயம் நாம் போடும் கூச்சல் வெளியில் கேட்காதது போன்ற உணர்வும் ஏற்படும். இதற்கு தூக்க பக்கவாதம் (Sleep Paralysis) என்று பெயர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது உடல் சில நிமிடங்களுக்கு செயலிழந்து போகும். தூக்கமின்மை, அதிக மன அழுத்தம், அதிக மன பாரம் போன்ற காரணங்களின் வெளிப்பாடே இது போன்று நடக்கக் காரணம். அடிக்கடி இதுபோன்ற உணர்வு வந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்