மதுரை: மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் பலி
மதுரை அருகே அவனியாபுரம் யாதவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் மனைவியை பிரிந்து 9 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மன கவலையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தான் வசித்து வந்த வீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையில் நேற்று (அக். 11) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மாமா சேகர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.