மதுரையில் மக்களுக்கு அச்சுறுத்தம் வகையில் வில்லாபுரம் பகுதியில் உள்ள இன்டேன் கேஸ் கம்பெனியை இடமாற்றம் கோரி சமூக ஆர்வலர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் இயங்கி வரும்(indane) கேஸ் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலரும் பாஜக அவனியாபுரம் மண்டல் தலைவர் கருப்பையா என்பவர் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை - அருப்புக்கோட்டை மெயின் ரோடு மீனாட்சி நகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்டேன் கேஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இந்த கேஸ் குடோன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கேஸ் கம்பெனி சுற்றி மூன்று மாடி திரையரங்கம், வணிக வளாகங்கள், வங்கிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளது. பெட்ரோல் பல்க், ஆகியவை உள்ளது. கேஸ் குடோன் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை செயல்படக் கூடாது என்ற சட்ட விதி உள்ள நிலையில் பலமுறை இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.