மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகளில் தற்காப்பு கலைகள் மூலம் பாதுகாக்க சிலம்பம், சுழல்வாள் மூலம் பயிற்சிகளை பெண்கள் சிறுமிகள் செய்து காட்டினர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் மாநில தலைவர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சிறப்புரையாற்றினார். பெண்களுக்கு எதிரான மார்க்கம் கூறும் விழிப்புணர்வுகளை காதர்மைதீன், நஜ்மா பேகம், சேக். முபாரக் நிஜாமுதின் அப்துல்ஹமீது ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய எம்எல்ஏ அப்துல் சமது கூறியதாவது.
பெண்களுக்கான நடைபெறும் கொடுமைகளுக்கு சட்டங்கள் மூலம் சரியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது தண்டிக்கப்பட வேண்டும். விசிக நடத்தும் மதுபோதை மாநாடு மகளிர்க்கான மாநாடு திருமாவளவன் நடத்துகிறார். நான் வரவேற்கிறேன் எங்களுக்க்கு அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கலந்து கொள்வோம். மதுபோதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம் என தெரிவித்தார்.