ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சாத்தியமே இல்லை; நவாஸ்கனி
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சென்னையிலிருந்து இன்று (செப்.,21) விமானம் மூலம் மதுரை வந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் நவாஸ் கனி கூறுகையில், தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது. வக்பு நிலம் இல்லாதவர்கள் எதற்காக எங்களை தேடி வந்து அந்த சான்றைப் பெற வேண்டும். அசௌகரியத்தை அடைய வேண்டும். எனவே வக்பு சொத்துக்களை மட்டும் பத்திரம் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களுக்கெல்லாம் அந்த தடையை நீக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஐந்து மாநிலத்திற்கு கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலையில், இவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லை. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதை வரவேற்கிறோம். எங்களது விருப்பமும் அதுதான் என்று கூறினார்.