திருப்பரங்குன்றம்: கருமேகங்கள் சூழ மிதமான மழை.

75பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அவனியாபுரம் வில்லாபுரம் , சிந்தாமணி, பெருங்குடி விமான நிலையம் பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் கருமேகங்கள் சூழ சுமார் 2. 30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. வானம் கரு மேகங்களால் காணப்பட்டதால் சாலைகள் இருட்டாக காணப்பட்டது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இம்மழையால் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை வியாபாரங்கள் பாதிக்கப்பட்டது. சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக விடாமல் மழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் நிலவுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி