ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

75பார்த்தது
ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு
திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். முன்னதாக, இப்படத்தை டிசம்பர் 20ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி