திருப்பரங்குன்றம் - Thiruparankundram

விவசாய நிலத்தில் திடீர் தீ

மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர் மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் இன்று நண்பகலில் வெயில் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் தீ பற்றி எரிய தொடங்கியது. அருகில் உள்ள வயல் நிலங்களில் தீப்பரவ தொடங்கி அதிக அளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த மதுரை அனுப்பானடி நிலைய தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க 1 மணி நேரமாக போராடி வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக தீப்பிடித்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மதுரை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செல்வ விநாயகம் தலைமையில் அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా