24 மணி நேர விமான சேவை. வெறும் அறிவிப்பு மட்டுமா?

78பார்த்தது
மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை துவங்கப்படும் என அறிவிப்பால் பயனடையும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனத் தெரியவருகிறது.

மதுரை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு தேவையான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 305 பேரில் தற்போது260 பேர் மட்டுமே உள்ளனர். அதேபோல் மத்திய சுங்கத்துறை அதிகாரிகளும் சர்வதேச விமான நிலைய அறிவிப்பு வந்தாலும் சுழற்சி முறையில் 24 x 7 மணி நேர சேவையில் மூன்று பிரிவுகளில் பணியாற்ற அலுவலர்கள் நியமனம் இல்லை. உள்நாட்டு பயணிகள் வெளிநாடு செல்வதற்கும், வெளிநாட்டுப் பணிகள் வருகை பரிசோதனை செய்ய குடியேற்ற துறை அதிகாரிகள் (immigration) 24 x 7 நேர சேவைக்கு புதிய அலுவலர்கள் நியமனம் இல்லை. தற்போது உள்ள இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களில் 24 மணி நேர சேவைக்கு ஊழியர்கள் நியமனம் செய்யவில்லை.

மேலும் முக்கியமாக மதுரை விமான நிலையத்தில் விமான சேவையை ஒருங்கிணைக்கும்
பயண முனைத்தில் (Terminal office) 2 ஷிப்ட் அதாவது 14 மணி நேர சேவைக்கு மட்டுமே ஊழியர்கள் உள்ளனர். இது தவிர
பன்னாட்டு விமான சேவைக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு வர தயக்கம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி