திருப்பரங்குன்றம்: சிவபூஜை அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை

64பார்த்தது
திருப்பரங்குன்றம்: சிவபூஜை அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை
மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நேற்று (அக். 11) இரவு சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று (அக். 12) சுவாமி, தெய்வானை தங்க மயில் வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்திற்கு சென்று அம்பு எய்தல் விழா நடக்கும். அதற்காக அம்பு போடும் மண்டபத்தில் இதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி