மதுரையை தலைமையிடமாக கொண்டு
நியோமேக்ஸ்' நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி என பலர் உள்ளனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும் நிலம் தருவதாக ஆசை வார்த்தை கூறி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர்.
நியோமேக்ஸ் தொடர்பாக, மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் இதுவரை 1, 172 புகார்கள் பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் படி ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நியோ மேக்சில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக திட்டமிட்டு விடுதிக்கான முன்பணத் தொகை வழங்கியுள்ளனர்
இதனிடையே நியோமேக்ஸ் மூலமாக ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்களின் எதிர் தரப்பினர் விடுதி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இது போன்று முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு விடுதியை வழங்கக்கூடாது
எனவே காவல்துறையினர் அனுமதியுடன் வேண்டுமானால் கூட்டத்தை நடத்துவதற்கு விடுதியை தருகிறோம் என கூறியுள்ளனர்
இதுபோன்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் உள்ளரங்கு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது