மதுரை: துறைத்தலைவரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்; பரபரப்பு

84பார்த்தது
மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டுவருகிறது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இக்கல்லூரியின் பொருளாதார துறையின் (Economics Department) மதிய நேர பிரிவில் இருந்த மாணாக்கர்களுக்கான வருகை பதிவேடு திடீரென காணாமல் போயுள்ளது.

இதனால் அத்துறையின் தலைவர் பொருளாதாரத்துறையில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் தங்களுக்கு INTERNAL தேர்வு மதிப்பெண் அளிக்க மாட்டேன் எனக்கூறி வருவதோடு, தேர்வு எழுதவும் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியதோடு , வருகை பதிவேடு காணாமல் போனதற்காக வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணாக்கர்களிடமும் 1500 ரூபாய் அபராத தொகையாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதோடு அதற்கான ரசீது எதுவும் கல்லூரி நிர்வாகம் சார்பாக வழங்கவில்லை எனவும், மேலும் அபராத தொகை செலுத்தாத மாணாக்கர்களை வகுப்பிற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்துவதாக கூறியும் காமராசர் பல்கலைகழக உறுப்பு கல்லூரி பொருளாதார துறையின் (Economics Department) மதிய நேர பிரிவு மாணாக்கர்கள் துறைத்தலைவரை கண்டித்து நேற்று கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


அப்போது துறைத்தலைவருக்கு எதிராகவும், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்களை எழுப்பிவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you