மதுரை: பாதாள சாக்கடையில் சிக்கிய சிறுமி ; சிசிடிவி காட்சி

83பார்த்தது
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் கடுமையாக சேதமடைந்த நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் நடுவே பாதுகாப்பற்று திறந்த நிலையில் கிடந்த பாதாள சாக்கடையில் அவ்வழியாக சென்ற பள்ளி செல்லும் சிறுமியின் கால் சிக்கி விபத்திற்கு உள்ளாகி தவித்துள்ளார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து சிறுமியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சாலையில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

மேலும் சேதமடைந்த நிலையில் காணப்படும் பாதாள சாக்கடையின் மூடியை மாநகராட்சி நிர்வாகம் முறையாக சீரமைத்து இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி