மதுரை: போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

56பார்த்தது
யுஜிசி (UGC) விதிகளின் திருத்தத்தின் மூலம் மாநிலங்களுக்கு கல்வி, இடஒதுக்கீடு, மாநில உரிமையை மத்திய அரசு பறிப்பதை கண்டித்தும், UGC வரைவு அறிக்கை 2025ஐ திரும்ப பெற வேண்டியும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற UGCயின் புதிய அறிவிப்பை எதிர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.  இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டு யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பிவாறு தபால் நிலையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும், இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர் காவல்துறையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி